Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என்னது எங்களுக்கு விவாகரத்தா? முற்றுப்புள்ளி வைத்த கிருஷ்ண வம்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1980-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பக்தி படங்களில், குறிப்பாக அம்மன் வேடங்களில், அவர் முக்கியமாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தும் பெரும் புகழைப் பெற்றார். தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து, 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரம்யா கிருஷ்ணனும் கிருஷ்ண வம்சியும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என்ற தகவல் பரவியது.

இந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ள கிருஷ்ண வம்சி, “நான் படப்பிடிப்புகள் காரணமாக ஐதராபாத்தில் இருக்கிறேன், ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதைக் கொண்டு நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று சிலர் வதந்தி பரப்பி உள்ளனர். இதில் எந்த உண்மையும் இல்லை.

நாங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் ஒன்றாகச் செல்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம். ரம்யா கிருஷ்ணன் மிகுந்த மனித நேயம் கொண்டவர் மற்றும் மிகுந்த அறிவாளர்” என்று கூறி விவாகரத்து தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

Read more

Local News