தற்போது லோகேஷ் கனகராஜின் புதிய படமான ரஜினிகாந்த் நடிப்பில் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நாகர்ஜுனா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை முடித்ததும், “கைதி 2” படத்தை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

2019-ல் வெளியான “கைதி” படத்திற்கு அப்போதே இரண்டாம் பாகம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. அதோடு, “விக்ரம்” படத்தில் சூர்யா நடித்த “ரோலக்ஸ்” கதாபாத்திரம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. “விக்ரம்” பட ரிலீஸுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ், “ரோலக்ஸ் கதையை வைத்து தனி திரைப்படம் எடுப்பேன்” என்று கூறியிருந்தார், இதனால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டருக்கு கொடுத்த நேர்காணலில், “கைதி 2” படத்திற்குப் பிறகு, ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு ஒரு முழு திரைப்படம் எடுப்பேன். அதன்பிறகு தான் “விக்ரம் 2″ மூலம் LCU யூனிவர்ஸ் முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு திட்டங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை என்றால், “கூலி” போன்ற ஸ்டாண்ட்-அலோன் (standalone) திரைப்படங்களை தொடர்ந்து எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், “LCU” உருவான விதத்தை விளக்கும் ஒரு குறும்படத்தையும் அவர் எடுத்திருக்கிறார், அது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் லோகேஷ் கனகராஜ் தற்போது பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தயாரித்துள்ள “பென்ஸ்” மற்றும் “மிஸ்டர் பார்த்” ஆகிய படங்களின் அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.