Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

என்ன சொல்ல வருகிறது அருள்நிதியின் ‘ராம்போ’ ? இதுதான் கதைக்களமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ராம்போ’ படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற கிராமப்புற கமர்ஷியல் படங்களைக் கொடுத்த புகழ்பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள ‘ராம்போ’ நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது.

கதை ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்குகிறது. பின்னர் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களைக் கொண்டு கதை முன்னேறுகிறது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களும், அதிரடி மற்றும் ஆக்சன் நிறைந்த அழுத்தமான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் முத்தையா படத்தைப் பற்றி கூறுகையில், இந்தப் படம் எனது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு, புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் பணியாற்றுவது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகர பின்னணியில் அதிரடி, ஆக்சன் மற்றும் உணர்ச்சிகரமான பொழுதுபோக்கு படமாக ‘ராம்போ’ உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News