பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது திரைப்படங்களுக்கான கதாபாத்திரங்களில் முழுமையாக சென்று உடலமைப்பை மாற்றுவது, தோற்றத்தை அமைப்பது போன்ற பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். இதனைப் பொருத்தவரை, அவரை ‘மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ என industry-யில் அழைப்பதும் உண்டு. அந்த வரிசையில், தனது ஒரு திரைப்படத்தில் நடித்தபோது 10 நாட்களுக்கு மேலாக குளிக்காமல் கலந்து கொண்டதாக அவர் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, 1989 ஆம் ஆண்டு வெளியான ‘ராக்’ என்ற திரைப்படத்தில் அமீர்கான் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில், அவர் வீடு விட்டு வெளியேறி தெருக்களில் நாடோடி வாழ்க்கை வாழும் மனிதராக நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் மெலிந்து, அழுக்கடைந்த தோற்றத்துடன் இருக்க வேண்டியதாக இருந்ததால், தொடர்ந்து 12 நாட்களுக்கு குளிக்காமல் படப்பிடிப்பில் நாட்களில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இதில் மட்டுமல்லாமல், 1998 ஆம் ஆண்டில் வெளியான ‘குலாம்’ திரைப்படத்தில் நடித்தபோதும் இதே போன்று செயல்பட்டுள்ளார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஒரு வாரத்துக்கு மேல் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சிகளில் இடம்பெற்ற காயங்கள், அடிபட்ட தழும்புகள் போன்றவை குளித்தால் அழிந்து விடும் என்பதால், அதன் தொடர்ச்சியை பாதுகாக்கும் வகையில் அவர் குளிக்காமல் இருந்துள்ளார். மேலும், குளித்து மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் என்பதற்காகவே, சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் குளிக்காமல் இருந்ததாகவும் அமீர்கான் கூறியுள்ளார்.