Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் செய்த விஷயம்…என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதியரின் திருமணம் 2007ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும், ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், குறிப்பாக, மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” படத்தில் நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வந்தன. இதற்கு காரணமாக, திருமணத்தின் போது அபிஷேக் பச்சன் அவரது கைவிரலில் அணிந்த மோதிரத்தை கழட்டியிருந்தார் ஐஸ்வர்யா. அதனை தொடர்ந்து, ஒரு பேட்டியில் விவாகரத்து செய்திகளுக்கு அபிஷேக் பச்சன் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் இந்த வதந்தி தொடர்ந்து பரவி வந்தது. இதனால், அந்த சர்ச்சையை முற்றிலும் முடிக்க, ஐஸ்வர்யா ராய் மீண்டும் தனது கைவிரலில் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News