ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் குமார் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தயாரிக்கிறார்.

ஏற்கனவே, இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சுவாசிகா ஆகியோரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றப்போது பகிர்ந்துள்ளார். அதில், குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கான படமாக இருந்தது. ‘AK 64’ அனைத்து தரப்பினரும் விரும்பும் ஹாப்பியான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றுள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.