பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 60-வது பிறந்தநாள். இதே நாளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் அவரது பிறந்தநாளை கொண்டாடினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் “கூலி” திரைப்படத்தில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர்கள் மட்டுமல்லாமல், நடிகர் ஆமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பலர் பேசினார். ஆனால், சன் பிக்சர்ஸ் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஆமீர் கானுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதில், “இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், ஆமீர் கான் சார்! நமக்கிடையே நடந்த அந்த உரையாடலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சி! உங்களுடைய நுண்ணறிவு மற்றும் கதை சொல்லும் பாங்கு எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கிறது. எதிர்வரும் காலங்களில் நாம் திரையில் இன்னும் சிறப்பான படைப்புகளை உருவாக்குவோம். இந்த சிறப்பு நாளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.