தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு, அவர் தனது காதலர் ஆண்டனி தட்டிலை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது காதலும் திருமணமும் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, 2010ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால், எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. நான் கல்லூரி படிப்பை முடித்து, எனது சினிமா வாழ்க்கையை உருவாக்க வேண்டியிருந்தது. அதனால் நாங்கள் ஐந்து ஆறு வருடங்கள் பிரிந்திருந்தோம். ஆண்டனி கத்தாரில் இருந்தார், நான் சென்னையில் இருந்தேன். பின்னர் அவர் இந்தியா திரும்பியபோது நாங்கள் இருவரும் வாழ்க்கையை செட்டில் செய்ய நேரம் எடுத்துக் கொண்டோம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் திருமணத்திற்கு காத்திருந்தோம்.
நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரது வீட்டிலும் பிரச்சினைகள் வரும் என எதிர்பார்த்தோம். சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு நான் அப்பாவிடம் எனது காதலைப் பற்றி தெரிவித்தேன். ஆனால், அவர் அதை மிகவும் அமைதியாக எடுத்துக் கொண்டார். எனினும், நான் கனவு கண்டது போல எல்லாம் நிகழவில்லை.எங்களுக்குள் உள்ள உறவின் நெருக்கத்தை ஒரு நினைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 2018ல் ஆண்டனி எனக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார். அதற்கு நான் ‘நைக்’ என்று பெயர் வைத்தேன். அந்த பெயர், ஆண்டனியின் பெயரிலிருந்து ‘Ny’ என்பதையும், எனது பெயரிலிருந்து ‘Ke’ என்பதையும் இணைத்து ‘Nyke’ என அமைந்தது,” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.