பாடல்களுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பாலிவுட் சினிமாவில் தன் இடத்தை பிடித்த சன்னி லியோன், தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். மேலும், ‘ஓ மை கோஸ்ட்’ மற்றும் ‘தீ இவன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு, இந்தி, மலையாள மொழி படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சன்னி லியோன், தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது.ஒவ்வொரு நடிகருக்கும் தங்கள் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா என்பதற்கான கவலை இருக்கும். வெற்றிக்காக அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால், எப்போது வேண்டுமானாலும் விஷயங்கள் நாம் நினைப்பதுபோல நடைபெறாது.
அந்த சூழலை கட்டுப்படுத்துவது எங்களின் கைகளில் இல்லை. அதனால் அதில் சிக்கிக்கொள்ளாமல், செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரத்துக்கும் உலகம் மாறிக்கொண்டே இருக்கும்.நான் விரும்பிய விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருவதுதான் எனது தற்போதைய லட்சியம். கடின உழைப்பாளியாக இருந்து, தடைகளை உடைத்து முன்னேறியவராக மக்கள் என்னை நினைவுகூர வேண்டும்,” என்று கூறியுள்ளார்.