சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த், இன்று மொபைல் போன்களின் யுகத்தில் நமது இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள், இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் சிறப்பும் பெருமையும் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.

தங்களது பாரம்பரிய மற்றும் கலாச்சார வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என கூறி, மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி திரும்பி வருகின்றனர். அவர்கள் இங்கு தான் உண்மையான நிம்மதி மற்றும் மகிழ்ச்சி இருப்பதாக தெரிவிக்கின்றனர். தியானம், யோகா மற்றும் இயற்கையான வாழ்க்கை முறை ஆகியவற்றை நோக்கி அவர்கள் பயணிக்கின்றனர்.
நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.