மாடலிங் துறையின் மூலம் பலர் சினிமாவுக்குள் வந்துள்ளனர். அந்த வகையில், வெள்ளை குதிரை உள்ளிட்ட புதிய படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருபவர் ஜீவிதா. சென்னையை சேர்ந்த அவர் அளித்த பேட்டியில், “மாடலிங்கில் எடுத்த புகைப்படங்களை பார்த்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. என்னை வங்கிப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. அதற்காக தமிழ் பெண்ணான நான் தெலுங்கு, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டேன்.

சினிமா என்பது ஒரு கடல் போன்றது. அதில் உடனடியாக வாய்ப்புகள் வந்து விடாது. நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
நமக்கான நேரம் வரும் வரை உறுதியுடன் இருக்க வேண்டும். எனக்கு சின்னத்திரையில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்தி வருவதால், சின்னத்திரை பக்கம் செல்லாமல் இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.