Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விடுதலை இரண்டாம் பாகத்தின் நீளத்தை குறைத்துள்ளோம் – இயக்குனர் வெற்றிமாறன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் படத்தில் 8 நிமிடத்தை குறைத்துள்ளனராம். இதனை படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அதில் இயக்குனர் வெற்றிமாறன் ‘ இந்த திரைப்படத்தின் பணி நிறைவடைந்தது. படத்தின் நீள அளவை 8 நிமிடம் குறைத்துள்ளோம். இந்த படத்தை இயக்கியதில் நாங்கள் அனைவரும் நிறைய கற்றுக்கொண்டோம். இத்திரைப்படத்தில் நிறைய நபர்கள் அவர்களின் உழைப்பை கொடுத்துள்ளனர். அவர்களின் உழைப்பினால் தான் இப்படம் சாத்தியமானது அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த படம் எப்படி இருக்குன்னு பார்வையாளர்களான நீங்கதான் சொல்லனும் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News