சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்,

தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக பல திட்டங்களை செய்து வருகிறது. இதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.
மேலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படம் குறித்து கேட்கையில், நானும், ரஜினியும் இணைந்து படம் நடித்து இருக்கிறோம். மீண்டும் நடிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.கமல்ஹாசன் -ரஜினிகாந்த் ஆகியோர் மீண்டும் இணையப்போகின்றனர் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. முன்னதாக ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கையில், நானும் கமலும் இணைந்து நடிக்க போகிறோம் இப்படத்தை ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது ஆனால் கதையும் இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.