நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘கருப்பு’ திரைப்பட குழுவினர் ஜூலை 23ஆம் தேதி டீசரை வெளியிட்டனர். இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின்இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி அளித்த பேட்டியில், எங்களால் முடிந்தவரை ‘கருப்பு’ படத்தை தீபாவளிக்கு சுட சுட கொடுக்க முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த ஒரு வருடமாக என் மொத்த டீமும் இந்த ஒரே திரைப்படத்திற்காகவே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். சாய் அபயங்கரின் இசையை நீங்கள் ஏற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஐந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.