நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான படம் “பிளாக்”. இந்த திரைப்படம் ஹாலிவுட் திரைப்படமான “கோஹரன்ஸ்” படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். தமிழ் ரசிகர்களே பார்க்கும் அளவிற்கு, “கோஹரன்ஸ்” படத்தினை இயக்கிய இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி கிட்டத்தட்ட அதே தரத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று இப்படத்தின் “தேங்க்ஸ் மீட்” நடைபெற்றது. நடிகர் ஜீவா பிளாக் படத்தைப் பற்றி பேசுகையில், இது கமர்ஷியல் கூறுகள் நிறைந்த படம் அல்ல. இதில் அதிரடிக் காட்சிகள் அல்லது காமெடிக் காட்சிகள் இல்லை. ரசிகர்கள் சைலன்டாக படத்தை பார்த்தனர். இப்படத்தின் திரைக்கதை அந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றி எங்களுக்கு ஊக்கமாக உள்ளது. நான் டிஷ்யூம் படத்தில் கூட ஒரு டயலாக் பேசியிருப்பேன், அதாவது, “நாங்க எல்லாம் கைத்தட்டலுக்கு ஏங்கற ஜாதி” என்று. இப்படத்தின் வெற்றி நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பை மீண்டும் கொடுத்துள்ளது எனக் கூறினார்.

மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் “பிளாக்” படத்தின் பிரஸ் மீட் மற்றும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஜீவா பதிலளிக்கையில், “இந்த கேள்வியை நீங்கள் பிரியாவிடம் கேட்க வேண்டும். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் நல்லாயிருக்கும். ஒருவேளை அவருக்கு தேதி சரியாக ஏற்படாமல் இருக்கலாம், அல்லது தனிப்பட்ட வேலைகள் இருக்கலாம். அதனால் அவர் வரமுடியவில்லை. இதே சூழல் எனக்கும் நேரிடலாம், அது நம்மால் கணிக்க முடியாது,” என்று பதிலளித்தார்.