உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே இப்படி மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.அந்த வகையில் தற்போது ராம்சரணின் மெழுகு சிலையும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வரும் மே ஒன்பதாம் தேதி மாலை 6:15 மணிக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுசிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்திற்கு அது கொண்டு சென்று வைக்கப்பட இருக்கிறது.
