விஜய்யின் 69வது படம் அவரது கடைசி படமாக உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கும் இந்தப் படம் தெலுங்குப் படமான ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
‘பகவந்த் கேசரி’ படத்தை அனில் ரவிப்புடி இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கியுள்ள “சங்கராந்திகி வஸ்துனம்” படத்தின் ஒரு நிகழ்ச்சியில் ‘விஜய் 69’ பற்றிய தகவலை விடிவி கணேஷ் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “விஜய் ஐந்து முறை ‘பகவந்த் கேசரி’யை பார்த்து, அதை ரீமேக் செய்ய அனில் ரவிப்புடியிடம் இயக்கும் பொறுப்பை அளிக்கச் சொன்னார். ஆனால், அவர் அந்த வாய்ப்பை அவர் தவறிவிட்டார் என்றார்.
இதற்கு உடனே அனில் ரவிப்புடி பதிலளித்தார். “’விஜய் 69′ குழுவினர் அதை ரீமேக் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அது குறித்து நான் விவாதிக்க முடியாது. விஜய் சார் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. ஆனால், அவருடன் வேலை செய்ய எனக்கு நேரம் அமையவில்லை என்றார்.இந்த உரையாடலுக்கு பின், ‘விஜய் 69’ என்பது ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பதை விடிவி கணேஷ் குறிப்பிட வந்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆவலுடன் விவாதித்து வருகின்றனர்.