ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ என்ற பெரிய தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து முருகதாஸ் அளித்த பேட்டியில், “சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு காலத்தில் சல்மான் கான் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். மேலும் சில காரணங்களால் திரைப்படம் சரியாகப் வரவில்லை, இதெல்லாம் படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது, என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இதைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்ததுதான் ‘சிக்கந்தர்’ தோல்விக்குக் காரணம் என்றால், அந்த இயக்குனர் இயக்கிய தென்னிந்தியப் படத்தின் நாயகன் காலையிலேயே படப்பிடிப்புக்கு வருவாரே, அப்படம் எனது ‘சிக்கந்தர்’ படத்தை விட பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சல்மானின் இந்த கருத்து கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பெரும் பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

