டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘டியூட்’ படத்தில் நடித்துள்ளார். இந்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகிறது. பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். சரத்குமார், ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். சாய் அபயன்கர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி நிறுவனம் ரூ.25 கோடிக்கு கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
