ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் விஷாலின் 35வது படத்திற்கு ‘மகுடம்’ என்ற பெயரிட்டுள்ளனர்.
அதற்கான டைட்டில் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளார்கள். கடல் சார்ந்த ஒரு ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது. விஷால் நடித்து இந்த வருடம் வெளிவந்த ‘மத கஜ ராஜா’ நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.