விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகள் என்ற நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். விஷால் மயக்கம் போட்டதும் அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக முதலுதவி அளிக்க பட்டதை அடுத்து அவர் கண் விழித்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பசி களைப்பால் ஏற்பட்ட மயக்கம் தான் பிரச்சினை எதுவும் இல்லை விஷால் நலமாக உள்ளார் என்று தெரிவித்ததாக விஷாலின் மேனஜர் தெரிவித்துள்ளார்.
