தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் மரபுக் விளையாட்டு ஜல்லிக்கட்டு. இது பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு எனும் பெயர்களில் நடைபெற்று வருகிறது. இவ்விதமான வீர விளையாட்டை மையமாகக் கொண்டு தற்போது தமிழில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்குகிறார். இதில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘வடம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பால சரவணன் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக டி. இமான் பணியாற்றுகிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே அமைந்த மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.