Thursday, February 6, 2025

விக்ராந்த்-ன் வில்… நீதிபதியாக நடிக்கும் சோனியா அகர்வால்… இதுதான் கதையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘வில்’ – Foot Steps Production நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவராமன் இயக்கியுள்ள திரைப்படம். இதில் சோனியா அகர்வால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, படம் முழுமையான கோர்ட் டிராமா ஆக உருவாகியுள்ளது.

படம் இறுதிக்கட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இப்படத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது.ஒரு குடும்பத்தில் ஒரு உயில் காரணமாக ஏற்படும் சட்ட பிரச்சனை, அது நீதிமன்றத்தில் வழக்காக மாறுவது, அந்த வழக்கின் முடிவு என்ன? உயிலின் பின்னால் உள்ள தியாகம் என்ன? என்பதே இப்படத்தின் மையக்கரு.

உயர்நீதிமன்றம் பின்னணியாக, விக்ராந்த், சோனியா அகர்வால் மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, விரைவில் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. டீசர், ட்ரெய்லர் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News