Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

50 கோடி வசூலை கடந்த சீயான் விக்ரமின் வீர தீர சூரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் ₹52 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் ₹38 கோடி வரை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் நல்ல வரவேற்பு தொடருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்குப் பிறகும், விக்ரம், ‘வீர தீர சூரன்’ படத்தின் மூன்றாவது பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும், அந்த பாகத்தையும் இதே தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News