Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் அசத்தும் விஜய்யின் தி கோட்… தமிழ்நாட்டில் மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கியுள்ள புதிய படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம், குடும்பங்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. தற்போது திரைப்படம் அதன் இரண்டாவது வாரத்தைச் சந்திக்கின்ற நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் 200 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News