Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

பீஸ்ட் படத்தில் விஜய்யின் லுக் டெஸ்ட் வீடியோ வெளியீடு… இணையத்தில் வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு “ஜன நாயகன்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அரசியல் பின்னணியிலான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம், ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இப்படம் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற “அரபிக்குத்து” மற்றும் “ஜாலியோ ஜிம்கானா” ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, “அரபிக்குத்து” பாடலில் விஜய் சிறப்பாக நடனமாடியிருந்தார். இதன் காட்சியமைப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர். “அரபிக்குத்து” பாடல் யூடியூபில் 70 கோடி பார்வைகளை கடந்துள்ளது.சமீபத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் (X) பக்கத்தில் “பீஸ்ட்” திரைப்படத்தைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில், விஜய் “வீர ராகவன்” எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் தற்போது பகிர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News