Saturday, December 28, 2024

கேப்டன் விஜயகாந்த்-ன் நினைவுநாள் குரு பூஜைக்கு விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு, சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய், அங்கு இருந்து திரும்பி வந்து கண்ணீர் விட்டுக்கொண்டே விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் விஜயகாந்த் முக்கிய பங்கு வகித்தார். விஜய், செந்தூரபாண்டி என்ற படத்தின் மூலம் விஜயகாந்தின் தம்பியாக அறிமுகமானார். தற்போது, கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நினைவு நாளுக்கான அழைப்பை வழங்குவதற்காக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், நடிகர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்தார். அவருடன் சுதீஷ் உள்ளிட்டோரும் இருந்தனர். அவர்கள் விஜய்யிடம் விஜயகாந்தின் வெண்கல சிலையை வழங்கினர். மேலும், இன்று தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரவுள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News