இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வந்திருந்தவர் அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மாமன் படத்தைத் தொடர்ந்து என்னுடைய அடுத்த படம் மண்டாடி தான். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை போல் கடலில் நடக்கும் போட் ரேசிங் வீர விளையாட்டை கதைகளமாக கொண்டதுதான் மண்டாடி திரைப்படம்.திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, திரையில் காமெடிகள் நன்றாக தான் உள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பும் ஆதரவும் கொடுத்துள்ளதால் நான் இன்று கதையின் நாயகனாக உள்ளேன்.அதே போல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும், மதுரையில் த.வெ.க. மாநாடு குறித்த கேள்விக்கு, இதற்கு பதில் சொல்லுவது சரியாக இருக்காது. எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும். அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும். இன்றைக்கு விஜய் சார் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரலாம். எனக்கு விஜய்யை பிடிக்கும் விஜய் சாருக்கும் என்னை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவருடைய விருப்பம் என்றுள்ளார் .