பிரபல இயக்குநரான பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’. இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதேபோல், யோகி பாபு மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஒரு குடும்ப பின்னணியைக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது, மேலும் இது வருகிற ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி காம்போ ரசிகர்களிடையே மிகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஒரு ஓட்டல் வைத்துள்ள புரோட்டா மாஸ்டராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த படத்திற்கு சென்சார் வாரியத்திலிருந்து “யு/ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களாக இருக்கும் எனவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.