Touring Talkies
100% Cinema

Wednesday, May 21, 2025

Touring Talkies

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ பட ANTHEM வெளியீடு! #ACE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடித்து முடித்த 51வது திரைப்படமான ‘ஏஸ்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் அனைத்து காட்சிகளிலும் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி வசந்த், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.

சமீபத்தில் ‘ஏஸ்’ படத்தின் முதல் பாடலாக ‘உருகுது உருகுது’ என்ற பாடல் வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், கவிஞர் தாமரை எழுதிய இந்தப் பாடலை கபில் கபிலன் மற்றும் ஷ்ரேயா கோஷல் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ‘ஏஸ்’ திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலானது. திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் வகையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஏஸ்’ படத்தின் இரண்டாவது பாடலாகக் காணப்படும் ஆந்தெம் பாடல் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News