Wednesday, October 2, 2024

விரைவில் திரைக்கு வருகிறது விஜய்சேதுபதி நடித்துள்ள காந்தி டாக்ஸ்… வெளியான ஸ்பெஷல் வீடியோ! #GANDHITALKS

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் “காந்தி டாக்ஸ்”. இந்த படத்தை கிஷோர் பாண்டு ரங் பாலேகர் இயக்கி வருகிறார்.

2022ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கமலின் “பேசும் படம்” போல, இந்த படத்தையும் மவுனமாக உருவாக்கியுள்ளனர். இதற்கான இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைக்கிறார்.

இந்த நிலையிலில், இன்று காந்தி பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக “காந்தி டாக்ஸ்” படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதோடு, “இன்று ஒரு முக்கியமான குரல், மூலை முடுக்கெல்லாம் விரைவில் கேட்கப்படும் குரல்! அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள். ‘காந்தி டாக்ஸ்’ விரைவில் வரவிருக்கிறது,” என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News