Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தளபதி 69 படப்பிடிப்பை விரைவில் முடிக்க தீவிரம் காட்டும் விஜய்… ஏன் தெரியுமா? #Thalapathy69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட் படத்தை முடித்தவுடன், தனது 69வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய். வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கான இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதனால், படத்தை மூன்று மாதங்களில் முடித்து, முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்த காரணத்தால், 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய இடைவெளி இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு இயக்குநர் வினோத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News