Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அவர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026ம ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஜன நாயகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஜய்யின் கடைசி திரைப்படமாக இருப்பதால், ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறையினரிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி டியோல் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதி கட்டப் பணிகள் சென்னையில் நடைபெற்றன. தற்போது, ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் முழுமைபெற்றதையடுத்து, விஜய் அரசியல் பணிகளில் முழு நேரமாக ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த நேற்றைய நாளில் படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு அசைவ விருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, இப்படத்தின் டீசர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, வரும் ஜூன் 22ம் தேதி, விஜய்யின் பிறந்த நாளில் ஜன நாயகன் படத்தின் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News