Saturday, January 25, 2025

விஜய் அரசியலில் நன்மை செய்ய வேண்டும் என்று வந்துள்ளார்…ஆனால்… இயக்குனர் பார்த்திபன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.இந்த சூழலில், விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன், “நண்பர் விஜய்க்கு அரசியல் என்பது மிகவும் அவசியமா என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அவர் தற்போது ஒரு ராஜாங்கத்தை நடத்தி வருகிறார். அவர் அடுத்த சூப்பர் ஸ்டார். கலெக்ஷன் மன்னன் அவரே. ரூ.200 கோடி சம்பளம் பெறுகிறார். இப்படிப் பட்ட சிம்மாசனத்தை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளை பேச அவர் ஏன் செல்ல வேண்டும்? ஆனால், அவர் நன்மை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.

மாற்றம் என்பது இயல்பானது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கிய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. விஜயும் அவ்வாறு பின்வாங்குவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும், நன்மை செய்ய விரும்புபவரை நாங்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? அதனால், விஜய் தன்னுடைய முயற்சியில் முனைப்புடன் செயல்படட்டும்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News