Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்… சூர்யாவின் பிண்ணனி குரலில் வெளியான டீஸர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தேவரகொண்டா தற்போது ‘VD 12’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது.

கௌதம் தின்னனுரி இதற்கு முன்பு ‘ஜெர்ஸி’ மற்றும் ‘மல்லி ராவா’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, ‘ஜெர்ஸி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘VD 12’ திரைப்படத்திற்கு ‘கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு பிரபல நடிகர் சூர்யா குரல் வழங்கியுள்ளார். இப்படம் முழுவதுமாக ஒரு அதிரடி ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக விஜய் தேவரகொண்டா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடல் அமைப்பை பெற்றுள்ளார். இந்தப் திரைப்படம் வரும் மே 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News