நடிகர் விஜய், தனது 69வது படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், அவரது அரசியல் வருகை குறித்து நடிகர் கார்த்திக் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதனால் தம்பி விஜயின் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதையும் வரவேற்கிறேன். சினிமாவில் தனது உச்ச நிலையை அடைந்திருக்கும்போது அரசியலுக்கு வருவது ஒரு மிகப்பெரிய முடிவு.

எனினும், நான் விரும்புவதைப் போல அவர் அரசியலிலும் பணிபுரிந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் ஈடுபட முடியும். காரணம், அவர் கூற விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும். எனவே, விஜய் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே என் கருத்தாகும்,” என்று நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.