விஜய் ஆண்டனி தனது திரைப்பயணத்தை ஒரு இசையமைப்பாளராகத் தொடங்கியவர். அதன் பிறகு நடிகராகும் ஆர்வத்துடன் “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றார்.
தற்போது அவர், “அட்டக்கத்தி”, “பீட்சா”, “சூது கவ்வும்”, “இன்று நேற்று நாளை”, “மாயவன்” போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘மார்கன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் குற்றத் திரில்லர் வகைச்சார்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டதும் அது ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘மார்கன்’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.