Touring Talkies
100% Cinema

Tuesday, May 20, 2025

Touring Talkies

வழக்கறிஞராக நடிக்கும் விஜய் ஆண்டனி… வெளியான LAWYER பட அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி தன் திரைப்பயணத்தை இசையமைப்பாளராகத் தொடங்கியவர். பின்னர் அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாக “சலீம்”, “இந்தியா பாகிஸ்தான்”, “பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். தற்போது இவர் முழுநேர நடிகராக உருவெடுத்து வருகிறார். இவர் தற்போது ‘ககன மார்கன்’, ‘வள்ளி மயில்’, ‘அக்னி சிறகுகள்’, ‘சக்தி திருமகன்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். மேலும், இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.

தற்போது, இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு ‘லாயர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை நடிகர் விஜய் ஆண்டனி தன் எக்ஸ் (முன்னைய ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News