Wednesday, October 9, 2024

பிரபல படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவ்விரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து, லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது, படத்தின் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரபல படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், இதற்கு முன் அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் ஆகிய படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக ராஜா பணியாற்றியுள்ளார். படத்தின் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News