இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’. இதில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மேலும், படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளவர் அனிருத். இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடைபெறும் கதை அடிப்படையிலானது என்றும், ஒரு காதலன் தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கே டைம் டிராவல் செய்யும் கதை அமைப்பில் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘தீமா தீமா’ பாடல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.