Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

சமுத்திரகனி மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள வீரவணக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் வீர வணக்கம். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கம்யூனிஸ்ட் தோழராக நடித்துள்ளார். அவருடன், நடிகர் பரத் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும், தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதேபோல், பிரபல புரட்சி பாடகியும், கேரள மக்களால் மிகவும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையுமான 95 வயதான பி.கே. மேதினி அம்மாவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அனில் வி. நாகேந்திரன் இயக்கிய மலையாள வெற்றி திரைப்படமான வசந்தத்தின்டே கனல் வழிகளில் படத்தின் இரண்டாம் பாகமாகவே வீர வணக்கம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்காக எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே. குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து, ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

புகழ்பெற்ற பாடகர் சிம்மக்குரலோன் டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார், இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகராக தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார். குறிப்பாக, அவருடைய குரலில் உருவான புரட்சி பாடல், மறைந்த டி. எம். எஸ். பாடியுள்ளாரோ என்ற உணர்வை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News