வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜயதசமி புனிதமான நாளன்று அவர்கள் தங்கள் மகனின் பெயரை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளனர்.அதன்படி, அவர்கள் தங்கள் குழந்தைக்கு வாயு தேஜ் என்று பெயரிட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.தற்போது வருண் தேஜ் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திகில்-நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் லாவண்யா திரிபாதி ”தணல்”, ”சதி லீலாவதி” ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
