பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021 ஜூலை 16ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், 2022 மார்ச் மாதம் இந்த படத்திற்கான ‘டெஸ்ட் ஷுட்’ நடந்த போது சில அப்டேட்கள் வெளிவந்தன. இந்த படத்திற்காக சூர்யா ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து அதனுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது படப்பிடிப்பு அந்த ஆண்டே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு, தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், வெற்றிமாறன் “விடுதலை” படத்தை இயக்க சென்றார். இதனால், “வாடிவாசல்” படம் ஆரம்பமாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு, எக்ஸ் தளத்தில் சற்று முன், “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு “வாடிவாசல்” மீண்டும் திறக்கப்படுகிறது விரைவில் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.