Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

என் புகைப்படங்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்‌ – நடிகை ஐஸ்வர்யா ராய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதனால் தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று கூறி, ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 மேலும், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தன் உருவத்தை போல் தவறான படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாகவும், சிலர் அவற்றை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். யாருடைய அனுமதியுமின்றி அவர்களின் பெயர், படம் பயன்படுத்தப்படுவது தவறு என்றும், இது பாலியல் விருப்பத்திற்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவரது வக்கீல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் கூடிய வால் பேப்பர்கள் விற்பனை செய்யும் தளங்களும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களும் மனுவில் அடங்கியுள்ளன. 

வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் கரியா இந்த குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இந்த வழக்கு நவம்பர் 7ஆம் தேதி இணைப்பதிவாளர் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், ஜனவரி 15க்கு முன் கேள்விக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News