அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க திரையுலகம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறி, அதைக் காப்பாற்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளிநாட்டு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.100 சதவீத வரி என்பது எப்படி இருக்கும் என கருத்துக்கள் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்று அமெரிக்க வினியோக உரிமையாக உதாரணத்திற்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் விலைக்கு விற்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அந்தப் படம் மீதான 100 சதவீத வரியாக ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் விதிக்கப்படும். அப்படியென்றால் அந்தப் படத்திற்கான முதலீடு என்பது 2 மில்லியன் யுஎஸ் டாலர் ஆக உயரும். அதற்கேற்றபடி டிக்கெட் கட்டணங்களை உயர்த்தித்தான் ஆக வேண்டும். அப்படி உயர்த்தினால் அவற்றை மக்கள் வந்து பார்க்க வாய்ப்புகள் குறைவு.எனவே, அமெரிக்க வினியோக உரிமையை வாங்குபவர்கள் வெளிநாட்டுப் படங்களின் விலையை 50 சதவீதமாகக் குறைத்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால்தான் அதற்கான வரிவிதிப்புடன் இப்போது உள்ளபடி டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். அது இந்தியா போன்ற நாடுகளில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமாக அமையும்.
