Touring Talkies
100% Cinema

Friday, May 30, 2025

Touring Talkies

கிஷன் தாஸ் நடிக்கும் ‘ஆரோமலே’ திரைப்படம் வெளியான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முதலும் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்துக் கவனம் பெற்றவர் கிஷன் தாஸ். இதன் பின்னர் அவர் ‘தருணம்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, ‘ஆரோமலே’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில், அவருடன் நடிகர் ஹர்ஷத் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹர்ஷத் கான், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தில் குட்டி டிராகனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, விஜே சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ என்ற படத்திலும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் விடிவி கணேஷ் நடித்துள்ளார். இப்படத்தை புதிய இயக்குநராக அறிமுகமாகும் சரங் தியாகு இயக்குகிறார். இசையமைப்பாளராக சித்து குமார் பணியாற்றுகிறார்.

‘மார்க் ஆண்டனி’, ‘எனிமி’ போன்ற திரைப்படங்களை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தின் அறிமுக வீடியோவை பிரபல இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். புத்துணர்வாக நகரும் இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News