மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் உன்னி முகுந்தன், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அவருடைய ‘மாளிகப்புரம்’ திரைப்படம், மலையாள ரசிகர்களைத் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இவர், தமிழில் தனுஷ் நடித்த ‘சீடன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தில் வில்லனாக நடித்தார், அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.அவருடைய கடைசி வெளியான திரைப்படம் ‘மார்கோ’, பெரும் வெற்றியைப் பெற்று, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது, அவர் நடித்துள்ள புதிய படம் ‘கெட் செட் பேபி’.

வினய் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில், நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒய்வி ராஜேஷ் மற்றும் அனூப் ரவீந்திரன் திரைக்கதை எழுதியுள்ளனர். இப்படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலானது.மேலும், தற்போது ‘கெட் செட் பேபி’ படத்திற்கு தணிக்கை வாரியத்தால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.