Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Ui ஒரு ப்ரூட் சாலட் போல இருக்கும்… தமிழ் ரசிகர்கள் எனது அன்புக்குரியவர்கள் நடிகர் உப்பேந்திரா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா. தமிழில் விஷாலின் ‛சத்யம்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் ‛கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நாயகனாக நடித்து அவரே இயக்கிய ‘யு1’ என்ற படம் தமிழில் நாளை வெளியாகிறது. படம் கன்னடத்தில் தயாராகி இருந்தாலும் இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவருகிறது

இந்த படத்தை லஹரி பிலிம்ஸ், எல்.எல்.பி மற்றும் வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன், கே.பி.ஸ்ரீகாந்த் தயாரித்துள்ளனர். ரேஷ்மா, சன்னி லியோன், சாது கோகிலா, முரளி சர்மா, இந்திரஜித், நிதி சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். அஜ்னேஷ் லோகநாத் இசை அமைத்துள்ளார்.

படம் தமிழில் வெளியாவது குறித்து உபேந்திரா கூறும்போது “இந்தப்படம் ஒரு ப்ரூட் சாலட் போல தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கு ஏற்ற எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது. இன்னொரு சர்ப்ரைஸான விஷயமும் இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் எனது அன்புக்குரியவர்கள், என் படத்தை ஆதரிப்பவர்கள், இதற்கும் நல்ல வரவேற்பை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

- Advertisement -

Read more

Local News