தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது திறமையான நடிப்பாலும் இயக்கத்தாலும் புகழ்பெற்றவர். சமீபகாலமாக தெலுங்கு திரைத்துறையிலும் அடிக்கடி நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்கள், வில்லன் பாத்திரங்கள் போன்றவற்றில் நடித்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
அந்த வகையில் அவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ‘ராஜாகிளி’ மற்றும் ‘திரு மாணிக்கம்’ படங்கள் ஆகும். ‘ராஜாகிளி’ படத்தில் தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை அவரது மகன் உமாபதி இயக்கியுள்ளார். இந்த படம் தமிழகத்தில் பிரபலமாக இருந்து பின்னர் சர்ச்சைகளில் சிக்கி, சிறை சென்றுகொண்டு இறந்துவிட்ட ஒரு தொழிலதிபரின் வாழ்க்கை அடிப்படையாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மற்றொரு படம் ‘திரு மாணிக்கம்’, நந்தா பெரியசாமி இயக்கிய இதில், சமுத்திரக்கனியின் ஜோடியாக ‘நாடோடிகள்’ பட நடிகை அனன்யா நடித்துள்ளார். இந்த படம் ஒரு குடும்பக் கதை என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 27ஆம் தேதி இந்த இரண்டு படங்களுடன் மேலும் நான்கு முதல் ஐந்து புதிய படங்களும் வெளியாக இருக்கின்றன.