இந்தி திரைப்பட உலகில் முன்னணி சூப்பர் ஸ்டாராக உள்ளவர் ஷாருக்கான். தற்போது, ‘வார்’ மற்றும் ‘பதான்’ படங்களை இயக்கி புகழ்பெற்ற சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ என்ற புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற மே 20ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஜாக்கி ஷெராஃப் மற்றும் அனில் கபூர் ஆகியோர், ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதற்கு முன்னர், இவர்கள் மூவரும் 1995ம் ஆண்டு வெளியான ‘திரிமூர்த்தி’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.